திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மன்னார்குடி அருகே காரிக்கோட்டை, அத்திக்கோட்டை கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மன்னார்குடியில் 90 மிமீ, நீடாமங்கலத்தில் 102.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. மழைநீரை விரைவாக வடிய வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.