அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 66 வீரர்கள் மற்றும் 1300க்கும் மேற்பட்டோர் உயிர்இழந்தனர். 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய அரசு ஏப்ரல் 14ம் தேதியை நீத்தார் நினைவு தினமாக தேசிய அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று நாகை தீயணைப்பு நிலையத்தில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர்கள் மலர்வளையம் வைத்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடும் இடங்களிலும், பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
சென்னை விமானக் கட்டணம் மும்மடங்கு உயர்வு