திருவனந்தபுரம் மாநகராட்சியின் சாஸ்தமங்கலம் வார்டு பாஜக கவுன்சிலரும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.ஸ்ரீலேகா தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு செப்டம்பர் 30 அன்று மேயர் வி.வி.ராஜேஷிடம் கடிதம் அளித்துள்ளார். மேயர் பதவி கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தியே இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் 101 உறுப்பினர்களைக் கொண்ட மாமன்றத்தில் பாஜகவின் பலம் 50 ஆக சரிந்துள்ளது.