திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தம்

திருவள்ளூரில் இன்று (ஜூலை 13) அதிகாலை பெட்ரோலிய பொருட்கள் ஏற்றிவந்த சரக்கு ரயில் தடம்புரண்டு தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் வேலூருக்கு அடுத்து நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பலமணிநேரம் உணவு கிடைக்காமல் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி