சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனரில், திருவள்ளுவர் காவி உடை அணிந்தும் நெற்றியில் திருநீறு பட்டையுடனும் இடம்பெற்றிருந்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற விவகாரம் கடந்த காலங்களிலும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் இந்த பேனர் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.