சென்னை வடபழனியில் உள்ள போரோம் விஜயா மாலில் இன்று (பிப்.16) காலை மாலின் மேல் பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. மாலில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலில் இருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.