அயனாவரம்: காதலன் பலி.. விரக்தியில் காதலி தற்கொலை

அயனாவரம், சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெகதீசனின் மூத்த மகள் சுப்பு சவுமியா (20), கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த 4ம் தேதி, காதலன் சதீஷ்குமார் 'ரீல்ஸ்' எடுக்கும்போது ரயில் மோதி காயமடைந்து, 6ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். காதலனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தந்தை மறுத்ததால் மனமுடைந்த சுப்பு சவுமியா, திங்கள்கிழமை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி