சென்னையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தன் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தாய் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தாய் தூக்க மாத்திரை கொடுத்து மயக்கமடையச் செய்து, பின்னர் தன் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.