ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், சிபிஐ விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.