மூத்த மகன் விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையாகி வருவதையும் ஜெயலட்சுமி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு 8 மணியளவில் மகன்கள் இருவரும் தன் பேச்சைக் கேட்காததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என ஜெயலட்சுமி தனது கையில் வைத்திருந்த விஷ மருந்தை மகன்கள் முன்பாக அருந்த முயற்சித்துள்ளார்.
அப்போது மகன்கள் இருவரும் தாயிடமிருந்து விஷ மருந்தை பிடுங்கி அருந்தியுள்ளனர். இருவரும் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜூலை 31) இளைய மகன் கணேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார். இன்று (ஆகஸ்ட் 1) மூத்த மகன் விக்னேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.