சென்னை: பையை அபாய சங்கிலியில் மாட்டியதால் 45 நிமிடங்கள் நின்ற ரயில்

வெஸ்ட் பெங்காலில் இருந்து மைசூர் செல்லக்கூடிய விரைவு ரயில் சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 30 நிமிடத்திற்கு மேலாக நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். ஓட்டுநர் மற்றும் ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த பொழுது வட மாநில இளைஞர் ஒருவர் தான் கொண்டு வந்த கைப்பையை அவசர காலத்தில் ரயிலை நிறுத்தக்கூடிய அபாய சங்கிலி மீது மாட்டி வைத்ததால் ரயில் நின்றது என தெரிய வந்தது. எங்கே சிக்கிக்கொண்டால் போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என்ற பயத்தில் வட மாநில இளைஞர் இறங்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது. சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு விரைவு ரயில் இயக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி