முதல் பணியாக பாலாலயம் எனப்படும் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதற்காக கோயிலின் பிரகாரத்தில் யாகம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதி கோயிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மகா பூர்ணாவதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டு கடங்களில் பூஜைக்கு வைத்த புணித நீரை எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இத்தகைய பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்கும் பழமையான இக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையினர் கும்பாபிஷேக விழாவிற்கான நிதியை ஒதுக்காமல் பக்தர்களின் நன்கொடை கொண்டு கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி