இரவு பகலாக போட்டியானது நடைபெறுகிறது. இந்த போட்டியின் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அவருக்கு நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து மிக சிறப்பான வரவேற்பு மேளதாளங்களுடன் வானவேடிக்கையுடன் அளிக்கப்பட்டது. அங்கிருந்து அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, நிகழ்ச்சி திடலுக்கு வந்தார். மேலும் அவர் கால்பந்தாட்ட போட்டியை துவக்கி வைத்து பேசுகையில் விளையாட்டு என்பது வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அல்ல அது ஒரு மனிதனின் சுய ஒழுக்கத்தையும் நல்லெண்ணத்தையும் பிரதிபலிக்கும் ஒரு செயல் என்று கூறினார்.
மேலும் திரைப்படங்களுக்கு தற்காலத்தில் ஆங்கில பெயர்கள் வைக்கப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை தமிழிலும் பெயர் வைக்கின்றனர் என்று தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் ஆரவாரத்தால் அவர் பேச முடியாமல் சென்று விட்டார்.