தமிழக அரசு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி வருகிறது இதன் தொடர்ச்சியாக 2024 25ம் கல்வி ஆண்டில் திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் +1 படிக்கும் 115 மாணவர்கள் 168 மாணவியர்கள் என மொத்தம் 283 பேருக்கு விலையில்லா மிதிவண்டியினை பள்ளி வளாகத்தில் உள்ள முத்தையா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர். வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. சுப்பையா வரவேற்க உதவி தலைமை ஆசிரியர் கா. சகாதேவன் நன்றி கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்