திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நீதிமன்றம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக சாலையில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கசிந்தார். அப்பகுதியில் யாரும் உதவ முன்வராத நிலையில், அவ்வழியாகச் சென்ற மூன்று காவலர்கள் அந்த முதியவரைக் கண்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். பின்னர், முதியவரைத் தூக்கி அமர வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவலர்களின் இந்த மனிதநேயச் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றது.