ஆட்சியர் ஆய்வு செய்தபோது மருத்துவமனைக்கு வரும் மின்விநியோகம் தடைபட்டதால், செல்போன் டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் மருத்துவர்களிடம் ஆய்வை தொடர்ந்து விவரங்களைக் கேட்டு அறிந்தார். பின்னர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை மருத்துவமனைக்கு வரவைத்து மின்தடைப் பிரச்சனையை சரிசெய்தனர்.
தமிழகத்திலேயே தலைசிறந்த மருத்துவமனையாக பொன்னேரி மருத்துவமனை திகழ்கிறது என்றும், எந்தச் சிகிச்சைக்கு வந்தாலும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர் கல்பனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.