வல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் சிமெண்ட் ஆலை விரிவாக்கத்தால் கிராமம் முழுவதும் சாம்பல் கழிவு மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும், நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீரில் சாம்பல் கழிவுகள் கலந்துவிடும் என்றும், இதனால் பல்வேறு சுவாச கோளாறு நோய்கள் ஏற்படும் என்றும் கூறினர். சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்திய பின்னரே விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் பலர் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி தொகுதி போன்று தற்போது பொன்னேரி தொகுதியும் மாறிவருவதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி