திருவள்ளூர்: புதிய நியாய விலைக் கடை திறப்பு

திருவள்ளூர் நகராட்சி புங்கத்தூரில் ₹12.50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்டத்திலேயே முதன்முறையாக நவீன கழிவறை வசதியுடன் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார். திருவள்ளூர் நகராட்சியில் 15வது வார்டு புங்கத்தூர் பகுதியில் ₹12.50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்டத்திலேயே முதன்முறையாக நவீன கழிவறை வசதியுடன் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கல்வெட்டை திறந்து வைத்து நியாய விலை கடையில் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, நகர் மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி