கடலோர பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடலோர பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை ம்ருத்யுஞ்ஜெயா மருத்துவமனை மருத்துவ குழுவினர் எடை சரிபார்த்தல், ரத்த அழுத்த பரிசோதனை, பொதுநல மருத்துவம் மற்றும் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினர். அறக்கட்டளையின் இயக்குநர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பழவேற்காடு சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி