செங்குன்றம்: வீடுகளில் சீக்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த நியூ சன் கார்டன் பகுதியில் வீட்டில் மழை நீர் புகுந்ததால், பச்சையப்பன், செல்வராஜ், லட்சுமி, மோனிஷ் ஆகிய நான்கு பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, ரப்பர் படகு மூலம் அவர்களை மீட்டு, நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்தி