புழல் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகருக்கு தண்டனை குறித்து அறிவிப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கடந்த 28-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

அதன்படி, ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு என்ன தண்டனை வழங்குவது? என்பது குறித்து ஜூன் 2-ந் தேதி (அதாவது இன்று) அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. புழல் சிறையில் இருந்து ஞானசேகரன் பலத்த போலீஸ் காவலுடன் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்தி