சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவையை ஆண்கள் இயக்குவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும். விதிகளை மீறி ஆண்கள் இயக்கினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.