மூன்று தேர்வு மையங்களில் 3248 தேர்வர்கள் தேர்வு எழுதினர்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கியது. இத்தேர்வை எழுத 3248 பேர் விண்ணப்பித்திருந்தனர். திருவள்ளூர் மற்றும் கவரப்பேட்டை ஆகிய இடங்களில் மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. திருவள்ளூரில் பெண்களுக்காக அமைக்கப்பட்ட மையத்தில் 607 பேரும், கவரப்பேட்டையில் ஆண்களுக்காக அமைக்கப்பட்ட வேலம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் 1500 பேரும், ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி மையத்தில் 1141 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் 350 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி