பள்ளிக்கு சென்ற போது, பள்ளி அருகே கடம்பத்தூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் தமது டியூசன் நண்பருடன் பேசி விட்டு பள்ளிக்கு சென்ற போது திடீரென காரில் வந்த முதியவர் ஒருவர் முகவரி கேட்பது போல், பேசிக்கொண்டே திடீரென முகத்தில் ஸ்பிரே அடித்து காரில் கடத்திச் சென்று கிடங்கு ஒன்றில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும் இடது கை தோள்பட்டை அருகே கம்பியால் கிழித்த தழும்புகளுடன் அங்கிருந்து அரை மயக்கத்தில் தப்பித்து வந்து விடையூர் பகுதியில் காலி மைதானத்தில் மயங்கி விழுந்ததாகவும், அந்த பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் பார்த்து விட்டு மாணவனை மீட்டு செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் அளித்ததாகவும் கூறியதின் அடிப்படையில் அந்த மாணவனின் பெற்றோர் காவல் துறையினர் உதவியுடன் அங்கிருந்து அழைத்துச் சென்று கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மாணவனை உண்மையாகவே யாரேனும் கடத்திச் சென்று துன்புறுத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் கடம்பத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.