மதுரவாயலைச் சேர்ந்த காளீஸ்வரன் (39) என்பவர், தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை, நெற்குன்றம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் கிடந்த ஒரு கவரில் சுமார் ₹53,700 பணம் இருந்ததைக் கண்டார். அவர் பணத்தை பத்திரமாக எடுத்து, அக்கம் பக்கத்தில் விசாரித்தும் யாருக்கும் சொந்தமில்லை எனத் தெரியவே, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.