திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் - 24 என்ற இளைஞரை கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். சிறுமியிடம் காதலிப்பது போன்று நடித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரை காதலிப்பதை அந்த இளைஞர் சில தினங்களுக்கு முன்பு நிறுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறியதால் இளைஞர் மீது மணவாள நகர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். அத்தகைய புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.