தமிழகத்தில் வருவாய்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவலநிலையை தடுத்திடவும், பணியிடங்களை பாதுகாத்திடவும் வலியுறுத்தி பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி தங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விழித்திருந்த அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் வெண்ணிலா தலைமையில் தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.