இந்த நெடுஞ்சாலை வழியே அரசு மற்றும் தனியார் பேருந்து இயங்காததால் ஷேர் ஆட்டோவை மட்டும் நம்பி பகுதிவாசிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பயணியர் நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கிறது.
இதனால் இங்கு ஷேர் ஆட்டோவுக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல மப்பேடு - மேல்நல்லாத்துார் நெடுஞ்சாலையில் நுங்கம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பயணியர் நிழற்குடை பராமரிப்பில்லாமல் புதருக்குள் மாயமாகி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சியில் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.