இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன அதற்குள்ளாக வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆயின வீட்டில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் பணம் இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனது. ராதா ரவி, ராஜா, சந்திரசேகர், மூன்று குடும்பங்களை சேர்ந்த இவர்கள் தினந்தோறும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் திடீரென மின் கசிவு காரணமாக வீடு முழுவதும் எரியத் தொடங்கியது.
இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் வீட்டிற்கு வெளியே ஓடி வந்துவிட்டன தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன வீடுகள் முழுவதும் எரிந்த நிலையில் அவர்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவர்கள் தன்னந்தனியாக தவிர்த்து வருகின்ற மூன்று குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இது போன்ற மின்கசிவு மீண்டும் ஏற்படாதவாறு முழுவதுமாக பாதுகாப்பான மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.