சந்தேகத்தின் பேரில் அவர்களை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் வியாசர்பாடி எம் எம் கார்டன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கின்ற dio விக்னேஷ் என்பதும் தற்போது நடுகுத்தகை திருநின்றவூர் பகுதியில் வசித்து வருவதாகவும் அதேபோல் மற்றொருவர் திருநின்றவூர் பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே செல்போன் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், மணவாள நகர் பகுதியில் தமிழரசி என்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.