திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் 13-ஆம் தேதி பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் சார்ந்த ஓவியம் மற்றும் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. அரசு உத்தரவின் பேரில், 2026 ஜனவரியில் மாநிலம் முழுவதும் திருவள்ளுவர் வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதில், ஓவியப் போட்டி பிற்பகல் 1:30 மணிக்கும், ஒப்புவித்தல் போட்டி காலை 10:30 மணிக்கும் நடைபெறும். விவரங்களுக்கு 9790172986, 8056010146 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.