இதனை முறையாக பராமரிக்காமல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது பராமரிக்க வேண்டிய திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது ராஜம்மாள் தேவி பூங்கா இடத்தை குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்து நகராட்சி நிர்வாகம் திருவள்ளூர் பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்து கொடுக்க முக்கால் பாகம் இடத்தை எடுத்துக்கொண்டது.
இதனிடையே எம்ஜிஆர் சிலை பின்புறம் நிழல் தந்த பெரிய மரத்தை இரவோடு இரவாக வெட்டி அகற்றி விட்டனர். மக்கும் குப்பை மக்காத குப்பை கையாளும் கொட்டகை செட்டையும் இடித்து நகராட்சி நிர்வாகம் அகற்றியது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பூங்காவை தற்போது அங்கிருந்த பெரிய மரத்தையும் வெட்டி அகற்றி வணிக வளாகம் கட்டி அதை வாடகைக்கு விட நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பூங்காவில் இருந்த மரத்தை அடியோடு வெட்டி சாய்த்ததற்கு சமூக ஆர்வலர்கள் தங்களது வேதனையை பதிவு செய்துள்ளனர்.