திருவள்ளூர்: ஏரியில் குளிக்க சென்ற மாணவன் சடலமாக மீட்பு

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, கணேஷ் நகரைச் சேர்ந்த 17 வயது மாணவர் தருண், தனியார் பள்ளியில் பிளஸ் 2 சேர இருந்தார். பள்ளிகள் திறக்கும் நிலையில், நேற்று மதியம் தன் நண்பர் சரணுடன் நத்தமேடு ஏரியில் குளித்தபோது, நீச்சல் தெரியாமல் தருண் நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருநின்றவூர் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி