கூடைப்பந்தில் ஒரு நிமிடத்தில் ஸ்பைடர் ட்ரிப்ளிங் செய்துசாதனை

மதுரவாயல் எம். ஜி. ஆர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்து வரும் கூடைப்பந்து வீரரும், பல்கலைக்கழக அணியின் கேப்டனுமான அஸ்வின் குமார், ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்லிங் செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்துள்ளார். எட்டுக்கால் பூச்சி வலை பின்னுவது போல பந்தை இரண்டு காலுக்கும் இடையில் கொண்டு வரும் இந்த திறனை அவர் துல்லியமாகவும், வேகமாகவும் செய்து வந்துள்ளார். இந்த சாதனையை அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கின்னஸ் புத்தகத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி