குன்றத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூகவளை காப்பு நிகழ்ச்சி

தமிழக அரசின் சார்பில் குன்றத்தூரில் நடைபெற்ற சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் கலந்துகொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார். மேலும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட 1433 பயனாளிகளுக்கு ரூ. 127.83 கோடி மதிப்பிலான வீட்டு மனை பட்டாக்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி, தையல் இயந்திரங்கள் வழங்கினார். முதல்வர் உத்தரவின் பேரில் ஏழை மக்களின் வங்கி கணக்குகளில் ரூ. ஐந்தாயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டத்தில் நிர்வாகி இறந்தது குறித்து கேட்டதற்கு, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது இயக்கத்தின் பொறுப்பு என அமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்தி