திருவள்ளூர்: வாலிபர் குடித்த தர்பூசணி ஜூஸில் பூரான்.. அதிர்ச்சி

பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (27) சைதாப்பேட்டை சென்றபோது ராமாபுரத்தில் உள்ள 'கட்டன் சேட்டா' டீக்கடையில் தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்தார். ஜூஸ் குடித்தபோது அதன் அடியில் உயிருடன் பூரான் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கடை ஊழியரிடம் கேட்டபோது அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. பார்த்திபன் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி