திருவள்ளூரில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில், இன்று காலை முதல் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்லவும், நடந்து செல்லவும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தேங்கியுள்ள நீரை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி