செங்குன்றம்: கஞ்சா பறிமுதல்.. கடத்த முயன்ற இளைஞர் கைது

செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணி ஒருவரை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அவரது பையில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 15 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனை கடலூருக்கு கடத்தி செல்ல முயன்ற கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி