சென்னை தண்டையாா்பேட்டை நாவலா் குடியிருப்பை சோ்ந்தவா் மணி (எ) அருப்பு மணி (28). இவா் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறாா்.
அருப்புமணி தனது மனைவி, வேறொரு நபருடன் தவறான நட்பில் இருந்து வந்ததை அறிந்து மனவருத்தத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், சிறை வளாகத்தின் 5-ஆவது பிளாக் அருகில் இருந்த சுண்ணாம்பு கலவையை எடுத்து குடித்து, மணி ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
சிறைக்காவலா்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.