திருவள்ளூர்: டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் அரசு பணியாளருக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை நலசங்கத்தினர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்க பொதுச் செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதில் பணி நிரந்தரம், அரசு பணியாளருக்கு இணையான ஊதியம், கேரளாவில் வழங்கப்படும் 50,000 ரூபாய் போன்று ஊதியம் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில தலைவர் முருகன், மாநில செயல் தலைவர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி