இதில் 40 ஆண்டுகால காலம் பணி புரிந்து ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மட்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் அரசு ஊழியர்களுக்கு ₹6750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பாகுபாடு செய்யப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதி 313-ன்படி ஆட்சிக்கு வந்தால் இந்த ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பில் 2.57 காரணியில் ஓய்வூதியம் மற்றும் ஊதிய திருத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் இந்த தமிழ்நாடு அரசு இதுவரை அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசை கண்டித்து நெற்றியில் பட்டை நாமமிட்டும், மடிப்பிச்சை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பி 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.