இரண்டு அணிகளாக மாறி பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்திலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருவள்ளூரிலும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். டாக்டர் ராமதாஸ் தான் நியமித்த கட்சி நிர்வாகிகளை அழைத்து தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தி வருகின்ற சூழலில், அன்புமணி ராமதாஸ் திருவள்ளூரில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் இன்று (ஜூன் 15) ஆலோசனை நடத்த உள்ளார். திருவள்ளூர் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள சிஎம் பேலஸில் அன்புமணி ராமதாஸ் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றார். இதில் பங்கேற்க கட்சி தொண்டர்கள் திரளாக வந்துள்ளனர்.