ஜூன் மாதத்திற்குள் திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி 2 வருடங்களாக மந்தமான நிலையில் நடந்து வருகிறது. கட்டிடக் கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட காலம் 1.5 ஆண்டுகள் ஆகும், இது டிசம்பர் 2024 க்குள் முடிக்கப்பட வேண்டும். பருவமழை மற்றும் கட்டுமானப் பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் கட்டுமானப் பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்க விரைந்து பேருந்து நிலையத்தை கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்