பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (52) என்பவர் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றபோது, கரடிப்புத்தூா் சாலையில் ஜே.ஜே.நகா் அருகே பின்புறமாக வந்த கார் மோதி பலத்த காயமடைந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.