திருவள்ளூர் மாவட்டம் எல்லப்ப நாயுடு பேட்டை கிராமத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது சுகுணா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் மூதாட்டியின் கழுத்தை நெரித்து, கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 6.5 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் 30,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.