திருவள்ளூர்: சுடுகாட்டுக்கு பாதை வேண்டும்.. கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சி பரேசபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிராம மக்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம், நரசிம்மன், முனுசாமி ஆகிய 3 பேருக்கும் சுடுகாடு பாதை அமைப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், காரில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர் இரும்பு கம்பிகளுடன் வந்து கிராம மக்களைத் தாக்கியுள்ளனர். கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாகனங்களை முற்றுகையிட்டு 10 பேரைப் பிடித்து விசாரிக்க, அப்போது சுடுகாடு பிரச்சனை காரணமாக மூன்று பேரும் வெளியாட்களை ஊருக்குள் அழைத்து வந்து பிரச்சனை செய்ததுத் தெரிய வந்தது. 

பரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மீது வெளியாட்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதால் தங்களது உயிருக்கு ஆபத்து என்று கூறி, பாதுகாப்பு வழங்கவும், தாக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் திருவாலங்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது கிராமத்திற்கு சுடுகாடு மற்றும் பாதை அமைக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி