திருவள்ளூர்: சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) சோனாடிக்கா (26). இவர் மீது அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் நீதிமன்றம் பிடிப்பானை பிறப்பித்தது. இதையடுத்து மணவாளர்கள் போலீசார் இவரைத் தேடிச் சென்றனர். இந்நிலையில் சோனாடிக்கா வெங்கத்தூர் ஏரியில் பதுங்கியிருப்பதாக மணவாள நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணவாள நகர் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையில் போலீசார் வெங்கத்தூர் ஏரியில் பதுங்கியிருந்த சோனாடிக்காவைப் பிடிக்க முயன்றனர். அப்போது சோனாடிக்கா பிடிக்க வந்த சப் இன்ஸ்பெக்டர் கர்ணனை ஆபாசமாகப் பேசி கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது மணவாள நகர போலீசார் சோனாடிக்காவைச் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி