திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் அருகே செஞ்சிபானம்பாக்கம் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த அமீத்குண்டல் என்பவர் 6 வயது குழந்தையை கடத்திச் சென்றார். மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அமீத்குண்டல் பறித்துச் சென்றார். அலறல் கேட்டு விரட்டிச் சென்றபோது, அமீத்குண்டல் குழந்தையை கீழே விட்டு தப்ப முயன்றார். புகாரின் பேரில், கடம்பத்துார் போலீசார் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த அமீத்குண்டலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.