திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், உளுந்தை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மு. ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என தனிக்கவனம் செலுத்தி அவரது சொந்தச் செலவில் ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் செலவில் வகுப்பறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் ஏசி மின்விசிறி ஆர்ஓ வாட்டர் சிறந்த இசையுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு வசதி பள்ளி வளாகத்தில் 23 சிசிடிவி கேமராக்களுடன் கூடிய வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசுப் பள்ளி தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக புத்தம் புதியதாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரையில் எந்த ஒரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற குளிரூட்டப்பட்ட வகுப்பறை, கண்காணிப்பு கேமரா, நவீன ஸ்மார்ட் வகுப்புகள் உடன் எந்த அரசுப் பள்ளியிலும் இதுவரையிலும் இதுபோன்று துவக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் ரோஜா பூ இனிப்புகள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைக் கண்ட மாணவர்கள் மேலும் உற்சாகமடைந்து பள்ளி வகுப்பறைகளுக்குச் சென்று அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.