திருநின்றவூர் 1வது வார்டு எஸ்.ஆர். திருமண மண்டப வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் இந்த வழியாக செல்வதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.